Tuesday 3 December 2013

24.07.2013

அன்பே தகழியாக,
ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக
நன்புருகி ஞான சுடர் ஏற்றினேன்
நாரணர்க்கு நான்.

+2-ல் என் மனைவி பொருளாதாரம் , வணிகவியல், கணக்கு பதிவியல் பாடப்பிரிவில்சிறப்பாக தேர்ச்சிபெற்றார்.
 இது நடந்தது 1988-89-ல்.

என் மகனும் இதே பாடப்பிரிவில் 1200 மொத்த மதிப்பெண்ணிற்கு மிக அருகே மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சிபெற்றார்.

இப்பொழுது 2013-ல்.
இந்த பொதுத் தேர்வின் போது இருவரும் சேர்ந்தே முக்கியமான, தேர்வுக்கு அடிக்கடி வரக்கூடிய கேள்விகளை ஆலோசித்து தயார் செய்து கொண்டிருந்தார்கள். நான் சற்று ஆர்வ மிகுதியால், மிக கவனமாக என் மனைவியிடம், நீங்கள் படித்ததோ 88-ல், உங்களுக்கு எப்படி இந்த முக்கியமான கேள்விகள்தான் வரும் என்று சொல்ல முடியும் என்று கேட்டததற்கு, இருவரும் போங்க டாடி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாது என்று "அழகன் " படத்தில் மம்முக்கா-வை ஓட்டுவதைபோல் என்னை சைடு எடுத்தார்கள்.

 நானும் விடாமல் என்னுடைய பௌதீக, MBA பிரதாபங்களை எடுத்து சொன்னவுடன், அவர்கள் இருவரும் சொன்ன பதிலின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவேயில்லை. அப்படி என்ன சொல்லிவிட்டார்கள்?


பாடத்திட்டம்  1988-க்கு முன்னாலிருந்தே மாறவில்லையாம்.

No comments:

Post a Comment